உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரை அப்போலோ மருத்துவமனையின் வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி வெற்றிகரமாக மதுரையில் நடந்தேறியது.
உலக இருதய தினத்தை முன்னிட்டு, மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவ
மனை, நடத்திய மாபெரும் விழிப்புணர்வு வாக்கத்தான் மதுரையில் நடைபெற்றது. இருதய நலம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த வாக்கத்தான் நடைபெற்றது. இந்த நடை
பயிற்சியில், 2000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
காலை 6 மணி அளவில் மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கல்லூரியில் தொடங்கிய வாக்கத்தான் காலை 8.30 மணி அளவில் அப்போலோ மருத்து
வமனையில் நிறைவடைந்தது. இந்த நடைபயிற்சி 3 கி.மீ. மற்றும் 5 கி.மீ. என இரண்டு வழித்தடங்களில் நடைபெற்றது. வாக்கத்தானில் அனைத்து வயதினரும் பங்கேற்றனர்.
வாக்கத்தான் நிகழ்ச்சியை கொடி அசைத்து துவக்கி வைத்தார் மதுரை அப்போலோ மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி .பி.நீலக்
கண்ணன். நிகழ்வின் முக்கிய அம்சமாக, மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் இருதய நல சிகிச்சை மருத்துவர்கள் டாக்டர். வே.ஶ்ரீதர், டாக்டர். சி. விவேக் போஸ், டாக்டர்.பி.சுப்புராமகிருஷ்ணன், டாக்டர்.எம். ரங்க மணிகண்டன், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர். பெனட் ராஜ் மோகன் சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர். அருண் பிரசாத் சிறப்புரையாற்றினார்கள்.
இருதய நலத்தைப் பராமரிப்பதற்கான ஆலோசனைகளை மருத்துவ நிபுணர்கள் வழங்கினர். நீண்ட ஆயுளுக்கு இருதய நலம் அவசியமானது. இதைப் போன்ற நிகழ்ச்சிகள் ஆரோக்கியமாக இதயத்தைப் பராமரிக்க பாதுகாப்பு பராமரிப்பு, சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பொதுமக்களின் நினைவில் நிறுத்துவதாக அமையும் என்றனர். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய பழக்க
வழக்கங்கள், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மற்றும் இருதயப் பரிசோதனைகளின் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
எலும்பியல் சிகிச்சை மருத்துவர் டாக்டர்.ஜான் பென்னி, மருத்துவ சேவைகளின் இணை இயக்குநர் டாக்டர்.பிரவீன் ராஜன் மார்கெட்டிங் பொது மேலாளர் மணிகண்டன் ஆகியோரும் நிகழ்வை உடன் இருந்து சிறப்பித்தனர்.
அப்போலோ மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி திரு. பி. நீலக்கண்ணன் பேசுகையில், “இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள இருதய நோயாளிகளுக்கு ஆரோக்கியம் குறித்த நம்பிக்கையையும் அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சையையும் வழங்கும் வகையில் நமது மருத்துவர்கள் அப்போலோவை தேசிய சிறப்பு மையமாக மாற்றியுள்ளனர். இதுவரை 200,000 க்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சைகள் மற்றும் 300,000 ஆஞ்சியோபிளாஸ்டிகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன.
இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைகளில் குறிப்பிடத்தக்க வகையில் 99.6% வெற்றி விகிதத்தை நாங்கள் அடைந்துள்ளோம், அவற்றில் 91% க்கும் அதிகமானவை இருதய அறுவை சிகிச்சைகளாக செய்யப்பட்டுள்ளன. இது உலகளாவிய சராசரி வெற்றி விகிதத்தை சுமார் 98% ஐ விட அதிகமாக உள்ளது, இது இருதய நல சிகிச்சையில் எங்கள் தனித்துவத்தையும் மற்றும் மருத்துவ சிறப்பையும் நிரூபிக்கிறது.
எங்கள் மருத்துவர்கள் மற்றும் இருதயவியல் குழுவின் இந்த குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பிற்கும் நிபுணத்துவத்திற்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்க விரும்புகிறேன். எங்கள் மருத்துவர்களின் இந்த தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் மூலம் அப்போலோ மருத்துவமனையின் இருதய நல சிகிச்சை சிறந்த தேசிய மற்றும் சர்வதேச மையமாக எங்களை நிறுவியுள்ளது.” என்றார்.
வாக்கத்தானில் பங்கேற்றவர்களுக்கு டி-சர்ட், பை, மெடல்கள், சான்றிதழ்கள் மற்றும் பானங்கள் வழங்கப்பட்டது.