images 53 - 2026

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் செய்ய முடிவு ..!

சற்றுமுன்

இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 5 சதவீதம் என்ற அளவை நீக்க ஆலோசனை நடத்திவருகின்றனர்.

தற்போது 5, 12, 18, 28 ஆகிய சதவீத அளவுகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் நிலையில், தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கு மட்டும் மூன்று சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐந்து சதவீத வரி அளவில் உள்ள பொருட்களை சிலவற்றை மூன்று சதவீத பிரிவிற்கும், எஞ்சியவற்றை எட்டு சதவீத பிரிவிற்கும் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஐந்து சதவீத பிரிவை ஏழு, எட்டு அல்லது ஒன்பது சதவீதமாக உயர்த்தவும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு முறையும் ஒரு சதவிதம் ஜிஎஸ்டி வரி உயர்த்தும் போதும் அரசுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

images 53 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.