பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வராக மஜத., தலைவர் குமாரசாமி வரும் புதன்கிழமை பதவியேற்கிறார். தான் ஆசைப்பட்ட முதல்வர் நாற்காலியில் ஒரு வழியாக அமர்கிறார் குமாரசாமி.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எடியூரப்பா மறுநாளே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நெருக்கடி கொடுத்ததால், சட்டச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவும் நிர்வாகத்துக்கும் நீதிமன்றத்துக்குமான மோதல்கள் பாஜக., ஆட்சியில் மத்தியில் அடிக்கடி காங்கிரஸின் தூண்டுதாலால் ஏற்பட்டு வருவதால், அதைத் தவிர்ப்பதற்காகவும், மேலிடத்தின் உத்தரவை ஏற்று எடியூரப்பா தனது பதவியை சனிக்கிழமை நேற்று ராஜினாமா செய்தார்.
இதை அடுத்து காங்கிரஸ்- மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் சார்பில் முதல்வராக முன்னிறுத்தப் பட்டுள்ள குமாரசாமிக்கு, ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார் ஆளுநர். மேலும் திங்கள் கிழமை நாளை முதல்வர் பதவியேற்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 21ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாள் என்பதால், முதல்வர் பதவியேற்பு 23ஆம் தேதி புதன்கிழமை அன்று நடைபெறும் என் கூறப்பட்டது.




