இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா திருச்சியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மக்கள்
முடிவை மதிக்காமல் அதை மாற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் அதிகாரத்தை நிலைநிறுத்த பாஜக முயற்சித்து வருகிறது. பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி பல சாகசங்களை நடத்துவது அம்பலமாகியுள்ளது. மதசார்பற்ற கட்சிகள் இணைந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி சிந்திக்க வேண்டும். ஆர்.எஸ். எஸ். கட்டுபாட்டில் உள்ள மத்திய அரசால் இந்திய ஜனநாயகம், சட்டத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. மோடி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது. தமிழக அ.தி.மு.க அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றார்.
நாடு முழுவதும் அதிகாரத்தை நிலைநிறுத்த பாஜக முயற்சி: திருச்சியில் டி.ராஜா பேட்டி!
Popular Categories



