Dhinasari Home page

திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் புகார் மனு

சற்றுமுன்

கவர்னர் பாதுகாப்பில் கோட்டை விட்ட திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், வழக்கறிஞர் மற்றும் இணைச்செயலாளருமான ஆர்.எம்.பாபு முருகவேல் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு ஒரு புகார் மனுவை அனுப்பியுள்ளார்.

அதில், தமிழக கவர்னர் சமீபத்தில் மயிலாடுதுறை சென்றிருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு மற்றும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை அதிகரித்தல் ஆகியவற்றில் திறம்பட செயலாற்றாத திமுக அரசின் மீது அரசியல் சாசன விதிகளின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு அ.தி.மு.க. சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.