health tips - 2026

அப்பாச்சி தீர்வு: குறை பிரசவம், மசக்கை, உஷ்ணரோகம், மலக்கட்டு, காணாக்கடி..!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

அடிக்கடி குறைப்பிரசவமா?

சத குப்பைப் பூவை சுத்தம் செய்து கஷாயம் வைத்து சாப்பிட்டு வரவும். வேண்டுமானால் பாலில் கலந்து சுவைக்கு சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். இதனைத் தொடர்ந்து பருகி வர கர்ப்பம் தரிக்கும். குறைப்பிரசவம் ஆகாது.

மசக்கை காலத்திலே…

ஒரு சிலருக்கு ஐந்தாம் மாதத்திலேயே வயிற்று வலி ஏற்படுவதுண்டு. அதற்கு ஆம்பல் பூவுடன் விளாமிச்சை வேரையும் சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர வயிற்று வலி நிற்பதுடன் உடல் ஆரோக்கியமும் கூடும்.

உஷ்ண ரோகத்திற்கு…

செங்கழுநீர்ப் பூவை சுத்தம் செய்து சாறெடுத்து அதனுடன் சிறிது செந்தூரம் கலந்து உள்ளுக்கு சாப்பிடவும். உஷ்ண ரோகம் ஏதேனும் இருந்தால் சரியாகி விடும்.

மலக்கட்டு நீங்க…

இலவம் பூக்களை கஷாயம் வைத்து காலை, மாலை சாப்பிட்டு வர மலக் கட்டு அடியோடு போகும். ஜலக்கட்டு இருப்பின் அதனையும் போக்கும்.

காணாக்கடி சரியாக…

பூவரசம் பூக்களை கஷாயம் வைத்து காலை, மாலை ஓர் அவுன்ஸ் வீதம் கொடுத்து வர விஷப்பூச்சிக்கடி, காணாக்கடி (அலர்ஜி) முதலியவை குணமாகும். ஆனால், கடுகு, எண்ணெய் தாளிப்பு இல்லாத பத்திய உணவு உண்ண வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.