Butterfly - 2026

கண்ணைக் கவரும் வண்ணத்துப்பூச்சி வடிவில் வீடு..!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம்
Butterfly - 2026

கிரீஸில் உருவாக்கப்பட்டு உள்ள பட்டாம்பூச்சி வடிவிலான பிரமிப்பான சுவரில்லா வீடு விற்பனைக்கு வந்திருக்கிறது.

கிரீஸ் நாட்டின் கடற்கரை பகுதியில் ஒரு அட்டகாசமான வீடு கட்டப்பட்டுள்ளது. அதாவது, 5,381 சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீட்டில் சுவர்களே இல்லை என்பதுதான் இதன் சிறப்பம்சம் ஆகும்.

எனினும் இந்த வீட்டில் 4 படுக்கையறைகள், 4 குளியலறைகள் மற்றும் நீச்சல் குளம் அடங்கிய பல ஆடம்பர வசதிகள் அடங்கியுள்ளது. இந்தவீட்டை மேல் இருந்து பார்க்கும் போது சிறகை விரித்த பட்டாம்பூச்சி போல் இருக்கிறது.

Butterfly house - 2026

அதுமட்டுமல்லாமல் இந்த வீடு செயற்கை ஏரிகள் மற்றும் மிதக்கும் பாதைகளால் சூழப்பட்டுள்ளது. சுற்றிலும் உள்ள பசுமை இந்த வெள்ளை நிற கட்டடத்தின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது.

இவ்வளவு சிறப்புவாய்ந்த இந்த வீட்டின் விலை 5.2 மில்லியன் பவுண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 52 கோடி ஆகும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.