images 78 - 2026

இந்தியாவில் கொரோனா ஆட்டம் மீண்டும் ஆரம்பம்!?

சற்றுமுன்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா மீண்டும் நான்காவது ஆட்டத்தை இந்தியாவில் ஆரம்பித்துள்ளதாக வே பலரும் கூறிவருகின்றனர்.

இந்தியாவில் தினசரி கொரோனா பரவல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,451 பேருக்கு கோவிட் உறுதியாகியுள்ளது. தற்போது, 14,241 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,589 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,16,068 ஆனது.

நேற்று 54 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்ததால், இறந்தவர்களின் எண்ணிக்கையும் 5,22,116 ஆனது. நேற்று 18,03,558 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 187. 26 கோடி ஆனதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

images 78 - 2026
202204220954178633 Tamil News Tamil News Covid XE in Kollam Health official confirms MEDVPF - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.