health tips - 2026

அப்பாச்சி தீர்வு: பாத எரிச்சல், பாலுண்ணி, வாயு ஏப்பம், கோழைக்கட்டு, மனநோய்..!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

பாத எரிச்சல் குணமாக…

மருதாணி இலையை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து பாதத்தில் தடவி வர பாத எரிச்சல் குணமாகும். தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர வேண்டும்.

பாலுண்ணி மறைய

சிவப்பு முள்ளங்கி இலையை நன்றாக உலர்த்தி சருகு போல் காய வைத்து எரித்து சாம்பலாக்கி விளக்கெண்ணெய் விட்டுக் குழப்பி அதை ஒரு வெள்ளைத் துணியின் மீது தடவி பாலுண்ணி மீது போட்டு விட வேண்டும். இவ்வாறு சில தினங்கள் செய்து வர பாலுண்ணி மறைந்து விடும்.

அடிக்கடி ஏப்பம் வருகிறதா?

கொத்துமல்லியை (தனியா) வறுத்து, கால் பங்கு சோம்பு சேர்த்து தூளாக்கி கால் ஸ்பூன் அளவு இருவேளை பாலில் கலந்து சாப்பிட்டு வர இரைப்பையில் வாயு உற்பத்தியால் ஏற்படும் ஏப்பம் நீங்கும்.

கோழைக் கட்டா?

குப்பை மேனி இலைச் சாற்றை ஒரு ஸ்பூன் அளவு குழந்தைக்குக்கொடுக்க அது வாந்தியை ஏற்படுத்தி கோழைக் கட்டு வெளியேற உதவும்.

மன நோய்க்கு…

சர்ப்பகந்தி இலையை நீர் விடாமல் கொஞ்சமாக வதக்கி அரை அவுன்ஸ் சாறெடுத்து நாலு அவுன்ஸ் பாலுடன் கலந்து தினமும் காலையில் மட்டும் சாப்பிட்டு வர உற்சாகமும் சுறுசுறுப்பும் ஏற்படும். மனநோய் நீங்கும். சுகமான நித்திரை உண்டாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.