பாம்புக்கு முத்தம் கொடுக்கும் இளம்பெண்ணின் வீடியோ, சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகிறது.
இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோவில், பாம்பின் தலை பெண்ணின் உதட்டுக்கு அருகில் வருவது தெரிகிறது. பாம்பிற்கு பெண் முத்தமிட்டதும், ஆச்சரியத்தில் பாம்பின் வாய் திறப்பதும் தெரிந்தால், அந்த வீடியோ வைரலாகாமல் என்ன செய்யும்?
பாம்பை செல்லப்பிராணியாக வளர்க்கும் கதை நமக்கு ராமநாராயணன் காலத்தில் இருந்தே தெரியும். ஆனால், அதற்கு முத்தமிடும் பெண்ணின் வீடியோவை யாராவது பார்த்ததுண்டா? இது ரீல் படம் இல்லை, பாம்பின் ரியல் வீடியோ படம் என்பதால் தான் இந்த பாம்பு முத்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது.
royal pythons’ என்ற கணக்கில் இருந்து, “Love my snake!” என்ற தலைப்பில் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில், பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஒன்பதாயிரத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவில், அழகான பெண் தனது செல்லப் பாம்புடன் இருப்பதைக் காணலாம்.
மெதுவாக பாம்பின் தலை பெண்ணின் வாய் அருகே வருவது வீடியோவில் தெரிகிறது. அதன் கன்னத்தில் பெண் முத்தமிட்டதும், பாம்பின் வாய் ஆச்சரியத்தில் திறக்கிறது. அதைப் பார்க்கும் பெண்ணும், பாம்பைப் போலவே தனது முகத்திலும் ஆச்சரியத்தைக் காண்பிக்கிறார்.
பிறகு, அந்த இளம்பெண், சிரித்துக்கொண்டே தன் பாம்பிடம், “ஐ லவ் யூ” என்று சொல்லி மீண்டும் முத்தமிடுகிறாள். அப்போதுதான் பாம்பு வாயை மூடிக் கொள்கிறது. அதன் பிறகு அந்த பாம்பும் பெண்ணின் கன்னத்தில் முத்தமிடுவதுபோல் செய்துவிட்டு நகர்கிறது. பாம்பு தனது கன்னத்தை தொடும்போது, தனது செல்லப்பிராணியின் “Awww” என்று அந்த பாம்பின் தோழி சொல்கிறார்.
இந்த வீடியோவை பார்த்து அதிரும் சமூக ஊடக பயனர்கள் பல்வேறு எமோஜிகளுடன் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், சிலர் பாம்பைப் போன்ற ஒரு விஷ ஜந்துவை எப்படி முத்தமிடுகிறார் இந்தப் பெண் என்று அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர்.