பணமில்லாமல் ஆர்டிசி பஸ்ஸில் பயணம் செய்யலாம். ஆந்திரப் பிரதேச மாநில ஆர்டிசி பஸ்களில் பணமில்லாத பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்டிசி பஸ்களில் பணம் இல்லாத பயணத்திற்கு பைலட் பிராஜக்டை ஏபிஎஸ் ஆர்டிசி அதிகாரிகள் விஜயவாடாவில் புதன்கிழமை தொடங்கி வைத்தார்கள். அதில் ஒரு பகுதியாக ஆர்டிசி வைஸ் சேர்மன், எம்டி மாதிரெட்டி பிரதாப் சலோ மொபைல் ஆப்.,பினை திறந்து வைத்தார்.
இரண்டரை லட்சம் பயணிகளுக்கு சலோ ஆப் உபயோகமாக மாறப் போகிறது. இந்த ஆப் போடு கூட ஸ்மார்ட் கார்டு களையும் ஆர்டிசி எடுத்து வருகிறது. டிம் மிஷன் (TIM Mission) மூலம் ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தலாம் என்று ஆர்டிசி எம்டி பிரதாப் கூறினார்.
இதன் மூலம் கிடைக்கும் பயன்கள்: சில்லரை பிரச்சினை ஏற்படாது. ஆர்டிசி ஊழியர்களுக்கு நேரம் வீணாகாது. பணம் இல்லாவிட்டாலும் கார்டு மூலம் பயணம் செய்யலாம். தினமும் பயணம் செய்யும் ஊழியர்களுக்கும் வியாபாரிகளுக்கும் உபயோகமாக இருக்கும்.