images - 2026

தமிழகத்தில் 1,000 திருக்கோயில்களில் ரூ500 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள்…

சற்றுமுன்

தமிழகத்தில் 1,000 திருக்கோயில்களில் ரூ500 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள், பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இன்று
சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக்கோரிக்கை அறிவிப்புகளின் போது தெரிவிக்கப்பட்டது‌.

ராமேஸ்வரம், திருவண்ணாமலை மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக பழனி மலைக்கும் இடும்பன் மலைக்கும் இடையே கம்பிவட ஊர்தி அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுக்கும் வேட்டை தொடரும்.திமுக ஆட்சி முடிவதற்குள் 15 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு பணி நிறைவடையும்.

மதுரை மாவட்டம் அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் திருவரசு ரூ1.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பணிகள் ரூ10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

images - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.