738522 ops - 2026

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய மனு தள்ளுபடி..

சற்றுமுன்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சி.பாலகிருஷ்னண் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

738522 ops - 2026

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரான சி.பாலகிருஷ்ணன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எதிர் மனுதாரர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.