தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொறுத்தவரையில் கடந்த 2 ஆண்டுகளாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று அண்மையில் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வீரியமடைந்துள்ளது. இதனை எதிர்கொள்ள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது,
தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.பி.ஏ.4 வகை கொரோனா தொற்று 4 பேருக்கும் பி.ஏ.5 வகை தொற்று 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய ஒமிக்ரான் தோற்றால் பாதிக்கப்பட்ட 12 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் .
டெண்டர் விடுவதற்கு முன்பாகவே முறைகேடு நடந்ததாக அண்ணாமலை கூறியுள்ளார். 2 நாட்களுக்கு பின்னர் தான் டெண்டரே விடப்பட உள்ளது; அதற்குள் நஷ்டம் என அண்ணாமலை புகார் கூறுகிறார். டெண்டர் பணிகள் முடியும் முன்பே ஊழல் நடந்ததாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக புகார் வைப்பார் என நினைத்தேன் ஆனால் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் எனவும் குற்றம் சாட்டினார்.






