IMG 20220521 205401 261 - 2026

தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா 3 மாதங்களில் 2வது முறையாக உலக சாம்பியன் ..

விளையாட்டு

 தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா 3 மாதங்களில் 2வது முறையாக உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸனை தோற்கடித்துள்ளார்.

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்னும் செஸ் தொடர் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. 16 வீரர்கள் பங்கேற்ற இந்த தொடரில் 5வது சுற்றில் சென்னையைச் சேர்ந்த 16 வயது கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, நார்வேயைச் சேர்ந்த உலகின் முதல் நிலை வீரரான கார்ல்ஸனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அவர், மேக்னஸ் கார்ல்ஸன் செய்த பெரும் தவறை தனக்கு சாதகமாக பயன்படுத்தி 40வது நகர்த்தலின் போது வெற்றியை தன்வசமாக்கினார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஏர் திங்ஸ் மாஸ்டர்ஸ்  ராபிட் செஸ் தொடரின் 8வது சுற்றில் மேகன்ஸ் கார்ல்ஸனை பிரக்ஞானந்தா தோற்கடித்தார்.

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அவர் 3 மாத இடைவெளியில் வளர்ந்து வரும் இளம் வீரரால் வீழ்த்தப்பட்டு இருப்பது செஸ் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  கார்ல்ஸனை தோற்கடித்த பிரக்ஞானந்தாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பிரக்ஞானந்தா தற்போது சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

IMG 20220521 205401 261 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.