vikatan 2022 05 faad5cbd b1ab 4875 8086 e144968b5575 quarry 1 - 2026

திருநெல்வேலி அருகே கல் குவாரியில் 6-வது நபரின் உடல் மீட்பு..

சற்றுமுன் நெல்லை

திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல் குவாரியில்6-வது நபரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணி முடிவுக்கு வந்தது.

அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல் குவாரியில்

கடந்த 14-ந் தேதி பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் சிக்கினர். இதில் முருகன், விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டு, பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். செல்வம் என்பவர் மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு முருகன், செல்வகுமார் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.

பாறை இடிபாடுகளுக்கிடையே சிக்கிய 6-வது நபரான ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்தில் அவரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கல்குவாரி விபத்தில் உயிரிழந்த நிலையில் 6-வது நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கற்குவியல்களுக்கு கீழே லாரியில் சிக்கியிருந்த ராஜேந்திரனின் உடலை மீட்புக் குழுவினர் மீட்டனர். 6-வது நபரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணி நிறைவடைந்தது.

vikatan 2022 05 faad5cbd b1ab 4875 8086 e144968b5575 quarry 1 - 2026
accident - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.