தமிழகத்தில் இன்று… 5980 பேருக்கு தொற்று; 80 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
corona-virus-4
corona-virus-4

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,980 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,73,410 பேராக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இன்று 71,679 பேருக்கு மேற்கொள்ளப் பட்டது. இதுவரை 39,95,513 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, கொரோனா தொற்றால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,420 பேராக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5,603 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதை அடுத்து, இதுவரை 3,13,280 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 53,710 ஆக உள்ளது.

தொற்று அடைந்தவர்களில் இதுவரை 83.90 % குணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது.

சென்னையில் இன்று கொரோனாவுக்கு பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 1,294 பேர் ஆக உயர்ந்துள்ளது. இது அண்மைக் காலத்தில் குறைந்து மீண்டும் உயர்ந்து வருவதைக் காட்டுகிறது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

சென்னையில் இதுவரை மொத்தம் 1,24,071 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். தற்போது சென்னையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 12,962 ஆக உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:

covid-19-district-wise-details-aug-22
covid-19-district-wise-details-aug-22

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.