சதுர்த்தி ஸ்பெஷல்: தினை மாவு பனைவெல்ல கொழுக்கட்டை!

Published:

thinai-panai-kozhukatai

தினை மாவு பனைவெல்ல கொழுக்கட்டை

தேவையானவை: தினை மாவு (சூப்பர் மார்க்கெட், காதி கடைகளில் கிடைக்கும்), பனைவெல்லம் – தலா ஒரு கப், தேங்காய் துண்டுகள் – அரை கப், ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி – தலா அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு. – தேவையான அளவு.
செய்முறை: தினை மாவை வெறும் கடாயில் வறுத்து… உப்பு, சிறிதளவு எண்ணெய் விட்டு கலந்து, கொதி நீர் தெளித்து பிசிறி மூடி வைக்கவும். இதை 10 நிமிடம் ஊறவிடவும். பனைவெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி எடுக்கவும். இத்துடன் சுக்குப் பொடி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துண்டுகள் சேர்த்து சுடவைத்து, கொதித்து வரும்போது பிசிறி வைத்த மாவை கொட்டி கலக்கவும். கெட்டியாக வந்ததும் இறக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

ALSO READ:  ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!

Related articles

Recent articles

spot_img