IMG 20220626 193155 788 - 2026

வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற இந்தியா..

விளையாட்டு

பாரீஸ் நகரில் நடந்த உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது ‌‌.

உலக கோப்பை வில்வித்தை போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அபிஷேக் வர்மா- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி துல்லியமாக அம்புகளை எய்து புள்ளிகளை சேகரித்தனர்.

இந்த ஜோடி 152 க்கு 149 என்ற புள்ளி கணக்கில் பிரான்சின் ஜீன் பிலிப் போல்ச்- சோபி டாட்மோன்ட் இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. உலக கோப்பை வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

IMG 20220626 193155 788 - 2026

1 thought on “வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற இந்தியா..”

  1. வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.