மொரீஷியஸ் தீவில் மகா சிவராத்திரி கொண்டாட்டம் கோலாகலம்

ஆன்மிகச் செய்திகள்

maha-shivarathri மொரீஷியஸ்: மொரீஷியஸ் தீவில், மகா சிவராத்திரியையொட்டி பக்தி சிரத்தையுடன் விழா கோலாகலமாகக் கொண்டாட்டப் பட்டது. கிரேட் பஸ்ஸின் பகுதியில் இருக்கும் சிவாலயத்தில் பக்தர்கள் கூடினர். மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளான மகா சிவராத்திரி இன்று, பக்தர்கள் புனித நீராடி, நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து சிவ நாமத்தை உச்சரித்து, சிவபெருமானின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்வது வழக்கம். இத்தகைய மகிமை மிகு மகா சிவராத்திரியான இன்று, இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவான மொரீஷியஸ் தீவில் இருக்கும் இந்து மக்கள் கிரேட் பசின் பகுதியில் மகா சிவராத்திரியைக் கொண்டாடினர். அங்குள்ள இந்த ஏரிக்கும் இந்தியாவில் இருக்கும் கங்கை ஆற்றுக்கும் தொடர்பு உண்டு என்று நம்பப்படுகிறது. கிரேட் பசின் பகுதியில் இருக்கும் உயரமான சிவன் சிலை அருகே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி திருவிழாகாகக் கொண்டாடினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.