செல்போன் பயன்படுத்திய பெண்களின் கை துண்டிப்பு; ஆண்களுக்கு சவுக்கடி: ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெறி

Published:

ISISபாக்தாத்: ஈராக்கில் செல்போன் பயன்படுத்திய பெண்கள் 3 பேரில் கைகளைத் துண்டித்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், அதே நேரம் ஆண்களுக்கு சவுக்கடி தண்டனை வழங்கியுள்ளனர் ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மொசூல் உள்ளிட்ட பகுதிகளை கடந்த ஜுன் மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடித்தனர். அதனைத் தனி நாடாக அறிவித்து, தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். மேலும், அந்தப் பகுதிகளில் அவர்கள் பலவித கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட திட்டங்களையும் விதித்துள்ளனர். அதில் முக்கியமான ஒன்று மக்கள் தனிப்பட்ட முறையில் செல்போன்கள் பயன்படுத்த கூடாது என்பது. மேலும், கடந்த நவம்பர் மாதம் முதல் மொசூல் நகரில் உள்ள அனைத்து செல்போன்களின் நெட்வொர்க்குகளும் முற்றிலுமாக முடக்கப் பட்டு விட்டன. தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீசித் தாக்கி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து எவரேனும் ரகசியமாக செல்போனில் தகவல் கொடுத்து விடலாம் என்ற அச்சம் பயங்கரவாதிகளிடம் நிலவுகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிப்பட்ட நபர்கள் எவரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று, அங்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. அதையும் மீறி ரகசியமாக செல்போன் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப் பட்டால், அவர்களுக்கு 30 சவுக்கடி தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் மொசூல் பகுதியில் செல்போன் பயன்படுத்தியதாக ஆண்கள் ஐந்து பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து செல்போன் பயன்படுத்திய 5 ஆண்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் சவுக்கடி தண்டனை நிறைவேற்றப் பட்டது. இதே போல், பொதுமக்கள் முன்னிலையிலேயே 3 பெண்களின் கைகள் வெட்டப்பட்டன. அப்பெண்களும் செல்போன் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

Related articles

Recent articles

spot_img