December 6, 2025, 1:03 AM
26 C
Chennai

இன்று தவறவிடாதீர்கள்: அனைத்து தோஷங்களையும் நீக்கும் காமிகா ஏகாதசி!

perumal 1 - 2025

ஆன்ம பலத்தை அதிகரிக்கச் செய்யும் ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி “காமிகா” என்றழைக்கப்படுகிறது.

இன்று விரதம் இருந்து தனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்தால் வீட்டில் மஹாலட்சுமி தாயார் நிரந்தரமாக வாசம் செய்வாள். நமது விருப்பங்கள் நிறைவேற்றும். மன பயம், மரண பயம், கொடிய துன்பம் ஆகியவற்றை நீங்கும்.

ஆவணி மாதமானது தமிழ் சூரிய மாதத்தில் சிங்க மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் ஆவணியானது மாதங்களின் அரசன் என்ற சிறப்பினைப் பெறுகிறது. கேரளாவில் ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்படுகிறது.

ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு நீடித்த புகழ்,நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுமையில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

காமிகா ஏகாதசி விரதம் அளிக்கும் புண்ணியத்தை பிரம்ம தேவர் பட்டியலிடுகிறார்.

இந்த நாளில் துளசியால் பெருமாளை பூஜை செய்வதால் ஸ்வர்ணத்தைத் தானம் செய்த பலன் கிடைக்கும். இந்த ஏகாதசி அன்று நெய் தீபம் ஏற்றுவது, தீப தானம் செய்வது ஆகியவை மிகுந்த புண்ணியத்தை அளிக்கும். இது கொடிய பாபங்களில் இருந்து விடுதலை வாங்கித் தரும் ஏகாதசி.

அஸ்வமேத யாகம் செய்த பலன் காமிகா ஏகாதசியை பற்றி கேட்போருக்கு உண்டு. காமிகா ஏகாதசி விரதமிருந்தால் காசியில் கங்கையில் குளித்த பலனைக் காட்டிலும், நைமிஷாரண்ய காட்டில் குளித்ததை விடவும், புஷ்கரணியில் குளித்ததை விடவும் பலன் அதிகம்.

சாலக்ராமக் கற்கள் அதிகமாக கிடைக்கும் கெண்டகி நதியில் குளித்த பலன் மற்றும் கோதாவரி நதியில் திங்கட்கிழமை வரும் பௌர்ணமி அன்று குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரிக்கும் போது குளிக்கும் பலனை விட அதிகமாக காமிகா ஏகாதசி விரத பலன் கிடைக்கும்.

காமிகா ஏகாதசி அன்று ஸ்ரீஹரியை துளசி கொண்டு அர்ச்சித்து வழிபடுபவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவர். மதிக்க முடியாத தங்கத்தையும் வைர வைடூரியங்களையும் கொண்டு அர்ச்சிப்பதை விட ஒரே ஒரு துளசி இலை சமர்ப்பித்து வழிபடுவது மேன்மையுடையது.

துளசிச் செடியில் துளசி மாதா வாசம் செய்வதாக ஐதிகம். எனவே, காமிகா ஏகாதசி அன்று துளசிச் செடியை தரிசனம் செய்வதே புண்ணியம் தரும்.

துளசிச் செடிக்கு நீரூற்றி அருகே ஓர் விளக்கேற்றிக் கோலமிட்டு நமஸ்காரம் செய்து வழிபட்டால் நோய் நொடிகள் நம்மை அணுகாது. மேலும், இந்த நாளில் புதிதாகத் துளசிச் செடி நடுவது மிகவும் மங்களமானது. அவ்வாறு செய்பவர்களுக்கு யம வாதை இருக்காது.

தினமும் துளசி மாதாவின் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுபவர்களின் புண்ணியக் கணக்கை சித்திர குப்தனாலும் அளவிட முடியாது
என்று துளசியின் பெருமையையும் அதைக் கொண்டு செய்யும் வழிபாட்டின் மகிமைகளையும் பிரம்ம தேவர் விவரிக்கிறார்.

வேறெந்த ஏகாதசியின் மகிமைகளைக் குறிப்பிடும்போதும் இந்த அளவுக்கு துளசியின் பெருமைகளை பிரம்ம தேவர் எடுத்துரைக்கவில்லை. எனவே, தவறாமல் காமிகா ஏகாதசி அன்று துளசி கொண்டு பூஜிக்க வேண்டும்

ஆவணி மாத ஏகாதசி விரதத்தினை காய்கறிகளைப் பயன்படுத்தாமல் பழங்களை மட்டும் பயன்படுத்தி விரதமுறையை மேற்கொள்ள வேண்டும்.

ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்ணுவை அதிதேவதையாக கொண்ட புத கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.

இந்த காமிகா ஏகாதசியை அனுஷ்டிப்பதால் கூடுதல் பலனாக ஒரு அந்தணரைக் கொல்லும் பாவம் (அ) கருவை சிதைக்கும் பாவம் அழிக்கப்படும்.
லக்னத்துக்கு 4 -ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, 6, 8, 12 -ம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும், 5, 9 – ம் வீடுகளுக்கு அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம்.

ராகுவின் இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9 – ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும் (அதாவது சனியும் குருவும் ஒரே பாதத்தில் 10 டிகிரியில் இருக்கவேண்டும்) தோஷமாகும்.

பிரம்மஹத்தி தோஷம் நீங்க திருவிட மருதூர் கோவில் சென்று பிரார்த்தனை செய்வதும், உத்தமர் கோவில் செல்வதும், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் செல்வதும் நல்லது.

அதற்கெல்லாம் சமம் இந்த காமிகா ஏகாதசி அன்று விரதம் இருந்தால் அவர்களுக்கு அந்த தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும்.

விரதம் இருக்க முடியாதவர்கள், ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லலாம். முழுவதும் சொல்ல முடியாதவர்கள் அதில்
ப்ரஹ்மோவாச என்று வரும். அதை சொல்லலாம்.

ப்ரஹ்மோவாச
நமோஸ் த்வநந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே
ஸஹஸ்ர பாதாக்ஷி ஸிரோரு பாஹவே |
ஸஹஸ்ரநாம்நே புருஷாய ஸாஸ்வதே
ஸஹஸ்ரகோடி யுக தாரிணே நம: ||
ஸஹஸ்ரகோடி யுக தாரிணே ஓம் நம இதி

இந்த ஸ்லோகம் சொல்லி வரலாம்.

அனைவருக்கும் நல்ல புத்தி கிடைக்கவும், தோஷங்கள் சரி ஆகவும், இந்த காமிகா ஏகாதசி பூஜை செய்து வருதல் நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories