885905 tarafic - 2026

ஐந்து வருட போக்குவரத்து நெருக்கடியால் காதல் மலர்ந்தாலும் மேம்பாலம் கட்டும்பணி மலரவில்லை..

அடடே... அப்படியா?

ஐந்து வருட போக்குவரத்து நெருக்கடியால் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது; ஆனால் மேம்பாலம் கட்டும் பணி இன்னும் முடியவில்லை பெங்களூரு போக்குவரத்து நெருக்கடியால் சந்தித்துக்கொண்ட இளம்ஜோடி காதலித்து திருமணம் வரை சென்ற ருசிகரமும் பெங்களூருவில் நடந்துள்ளது.

போக்குவரத்து நெருக்கடியால் உருவான இந்த ருசிகர காதல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரெடிட் என்னும் ஐ.டி. பணியாளர் இதை பகிர்ந்துள்ளார். பெங்களூரு சோனி வேர்ல்ட் சிக்னல் அருகே தனது காதலியை சந்தித்துள்ளார். முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் எஜிபுரா மேம்பால கட்டுமான பணியின்போது போக்குவரத்து நெருக்கடியால் நடந்தே பணிக்கு சென்றனர்.

அப்போது ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர். இருவரும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மாற்று வழியில் பயணத்தை தொடர்ந்தனர். 5 ஆண்டுகளை கடந்த நிலையில் காதல் வளர்ந்து திருமணத்தில் முடிந்தது. “நான் அவளுடன் 3 ஆண்டுகள் டேட்டிங் செய்தேன், திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் 2.5 கிமீ மேம்பாலம் இன்னும் கட்டுமானத்தில் உள்ளது” என்று பெங்களூருவாசி தனது டுவிட்டரில் கூறி உள்ளார்.

டுவிட்டரில் இவரது பதிவை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் மற்றும் ரியாக்ட் செய்துள்ளனர். சமூக ஊடக பயனர்கள் இந்த அழகான காதல் கதையைப் பாராட்டியும், பெங்களூருவில் நெரிசலான போக்குவரத்தில் தங்கள் சொந்த மோசமான அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்கள்.

ஏற்கனவே பெங்களூரு போக்குவரத்து நெருக்கடியை மையமாக வைத்து “சில்க் போர்டு, எ டிராஃபிக் லவ் ஸ்டோரி” என்று அழைக்கப்படும் ஒரு காதல் குறும்படம் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

885905 tarafic - 2026
image 4 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.