images 2022 10 14T165002.284 - 2026

இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தல்..

இந்தியா

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இமாச்சலப்பிரதேச சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அட்டவணையை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். நவம்பர் 12-பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அக்டோபர் 17-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் அக்.25-ம் தேதி மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12-ல் வாக்குப்பதிவு நடக்கிறது.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

images 2022 10 14T165002.284 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.