மங்கம்மாள் ராணி மங்கம்மா ஆன கதை

ஆன்மிகச் செய்திகள் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

மதுரையை ராணி மங்கம்மா ஆட்சி செய்து வந்த போது, மதுரையிலிருந்து, 80 கி.மீ., தூரத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோவிலில், “ஆண்டாளுக்கு நைவேத்யம் ஆகி விட்டது…’ என்று தெரிந்த பிறகு தான், ராணி, தன் சாப்பாட்டுத் தட்டிலேயே கை வைப்பார்

ராணி மங்கம்மாவுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து சிக்னல் எப்படிப் போயிருக்கும்?’

ஒலி மூலமாகத்தான் தகவல் தரப்பட்டிருக்கும்…’ காண்டாமணி மூலமாகவே அந்தச் செய்தி – அதாவது, ஆண்டாளுக்கு நைவேத்தியம் ஆன விஷயம் – ராணிக்கு சொல்லப்பட்டது…

“குறிப்பிட்ட தூர இடைவெளியில், பல காண்டாமணிகள், 80 கி.மீ., தூரத்துக்கும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு காண்டாமணியின் ஓசை, குறிப்பிட்ட தூரம் வரை கேட்கும். முதல் மணியோசை கேட்டவுடன் அடுத்த மணி அடிக்கத் தொடங்கும். இப்படியாக, சில நொடிகளிலேயே நைவேத்தியம் ஆன விஷயம், மதுரைக்கு வந்து கொண்டிருந்ததாம்…’

மதுரையில் பாண்டியர்களின் ஆட்சி கி.பி., 3 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கியதாம்; அந்த மன்னர்களின் பெயர் விவரம் தெரியவில்லை. ஆனால், ஆறாவது நூற்றாண்டிலிருந்து அந்த விவரம் நமக்குக் கிடைக்கிறது. முதல் பாண்டிய மன்னனின் பெயர்: குலசேகர பாண்டியன்.

பிறகு, 1311ல் முகலாய மன்னனான அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் காபூர் மதுரையைக் கைப்பற்றினான்.

ஆனால், முகலாயர் ஆட்சி மதுரையில் நீண்ட காலம் நீடிக்கவில்லை 60 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 1371ல் நாயக்கர்கள் மதுரையின் மீது படையெடுத்து வந்து, முகலாயர்களை விரட்டி அடித்தனர். அதிலிருந்து தான் மதுரையில் நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது.

நாயக்க மன்னர்களில் பிரபலமானவர் திருமலை நாயக்கர். அவர் மதுரையை ஆண்ட காலம்: 1623 முதல் 1659 வரை. அவருக்குப் பிறகு வந்தவர் சொக்கநாத நாயக்கர். இவரது படைத் தளபதியாக இருந்தவர், தளபதி லிங்கம நாயக்கர். இவரது மகளே மங்கம்மாள்.

மங்கம்மாளுக்கும், சொக்கநாத நாயக்கருக்கும் திருமணம் நடந்தது. பிறகு, 1682ல் சொக்கநாதர் இறக்கும் போது, அந்தக் கால மரபுப்படி தன் கணவருடன் உடன்கட்டை ஏற மறுத்து விட்டார் மங்கம்மாள். பிறகு, மொகலாயர் ஆட்சி மீண்டும் தலை தூக்கி விடாமல் இருப்பதற்காக, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் மங்கம்மா. இதுதான் மங்கம்மா, ராணி மங்கம்மாவாக மாறிய கதை.

————————–

1 thought on “மங்கம்மாள் ராணி மங்கம்மா ஆன கதை”

  1. நான் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன்… எனது ஊரில் மங்கம்மாள் என்னும் சாமியை கும்பிடுகிறோம்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.