FB IMG 1669011010812 - 2026

சபரிமலை பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிப்பு..

சற்றுமுன்
FB IMG 1669011010812 - 2026

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலைநான்கு மணிக்கு பதில் ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கு நடைதிறக்கப்படும்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி அன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறவில்லை. அதே சமயத்தில் புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பணியை தொடங்கினார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டதால் 17-ந் தேதி முதல் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தநிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு பதில் 3 மணிக்கும் மாலை ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கும் நடைதிறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலையில் பக்தர்கள் அரிசி கொடுத்தால் சாதம், பாயாசம் இலவசம்..

சபரிமலையில் பக்தர்கள் இருமுடியில் கொண்டு வரும் அரிசி, சர்க்கரையை கவுண்டரில் செலுத்தி வெள்ளைச்சோறு மற்றும் பாயாசம் இலவமாக பெறலாம்.

பக்தர்கள் இருமுடியில் கொண்டு வரும் அரிசி மற்றும் பொருட்களை ஆங்காங்கு விட்டு செல்கின்றனர். பின் இதை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தி குப்பை குடோனுக்கு கொண்டு செல்கின்றனர். இதை பக்தர்கள் தவிர்க்க அரிசிக்காக வைக்கப்பட்டுள்ள உண்டியலில் செலுத்தலாம். அல்லது அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை 18-ம் படியின் வலது பக்கம் அரவணை கவுண்டருடன் சேர்ந்திருக்கும் சர்க்கரை பாயாச கவுண்டரில் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் போது அதற்கு ஈடான சாதம் அல்லது பாயாசம் பெற்றுக் கொள்ளலாம். ரூ.25 கட்டணம் செலுத்தியும் இதை பெறலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.