images 68 - 2026

பொங்கல் பரிசு பெற‌ இன்று முதல் வீடுவாரியாக டோக்கன்..

சற்றுமுன்
images 68 - 2026

பொங்கல் பரிசு பெற‌ இன்று முதல் வீடுவாரியாக டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த பணி இன்று தொடங்கியது. ஊழியர்கள் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கி கொண்டிருக்கிறார்கள்.

அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை உணவு பொருள் வழங்கல் துறையினர் செய்து வருகிறார்கள். ரேஷன் கடையில் குடும்பத்தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கைவிரல் ரேகையை பதிவு செய்து தான் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகிறார்கள்.

இப்போது பொங்கல் பரிசு தொகுப்பை பெறவும் கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ரேஷன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த பணி இன்று தொடங்கியது. ஊழியர்கள் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கி கொண்டிருக்கிறார்கள். அந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை இடம் பெற்று இருக்கிறது. ஒரு நாளைக்கு 200 டோக்கன் வீதம் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் சிரமம் இல்லாமல் தங்கள் பரிசு தொகுப்புகளை வாங்கி கொள்ளலாம். பொங்கல் பரிசு தொகுப்பில் ஏதேனும் குறைகள் இருந்தால் புகார் செய்யலாம். அதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண்கள் வருமாறு:- 1967 மற்றும் 1800-425-5901.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.