கரூர் காந்திகிராமம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த மின் வயர்கள் அறுந்து சாலையில் தொங்கின… அவ்வழியே பயணித்த ஆட்சியர் த. அன்பழகன் உடனே தன் வாகனத்தை நிறுத்தினார்…
பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகளை ஏற்படுத்தச் சொன்னார்… மின்துறை அலுவலர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டார்… அறுந்து கிடந்த மின்வயர்கள் சரி செய்யப் படும் பணிகள் தொடங்கிய பின்னரே அந்த இடத்திலிருந்து கிளம்பினார்…



