தந்தி டிவி, மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியின் மூலம், உண்மை யார் பக்கம் என்பதை உறுதி செய்திருக்கிறது!
தந்தி தொலைக்காட்சி ‘மக்கள் யார் பக்கம்’ என்கிற பெயரில் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகிறது. இது ஒரு ‘ஊடக விபச்சாரம் இல்லை’ (Presstitution) என்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை தந்தி தொலைக்காட்சிக்கு இருக்கிறது.
ஒரு மாவட்டத்தில் 250 பேர் வீதம், தமிழகம் – புதுவையில் மொத்தம் 8250 பேரிடம் கருத்துக் கேட்டதாகவும், அந்த 8250 பேரின் கருத்து தான் தமிழ்நாட்டின் 7 கோடி மக்களின் கருத்து என்றும் பிரச்சாரம் செய்துவருகிறது தந்தி தொலைக்காட்சி.
தந்தி தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு கொஞ்சமாவது நேர்மை இருந்தால், பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்:
- “கருத்துக்கணிப்பை ‘உண்மையில்’ நடத்தியது யார்?”
இந்தக் கருத்துக்கணிப்பை Krish Info Media எனும் நிறுவனம் நடத்தியதாக தந்தி டிவி கூறுகிறது. ஆனால், அது ஒரு தகுதிவாய்ந்த நிறுவனமாக தெரியவில்லை. தந்தி டிவிக்காக கருத்துக்கணிப்பு நடத்துவது தவிர வேறு வேலையே அந்த நிறுவனம் செய்யவில்லை. அவர்கள் ஒரு கல்லூரியோ, பல நிபுணர்கள் பணியாற்றும் அமைப்போ அல்ல. எனவே, Krish Info Media நிறுவனம் கருத்துக்கணிப்பை நடத்தும் அளவுக்கு தகுதி உள்ளவர்களா? இந்த கருத்துக்கணிப்பில் 33 மாவட்டங்களில் ஊர் ஊராக சென்று கருத்துக்கணிப்பு செய்தவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியின் தொண்டர்களா? என்கிற கேள்விகளுக்கு தந்தி டிவி முழுமையான பதிலை அளிக்க வேண்டும்.
- “கருத்துக்கணிப்புக்கு செலவு செய்தது யார்?”
தந்தி டிவி கருத்துக்கணிப்புக்கு செலவு செய்தது யார்? மேலைநாடுகளில் ஒரு நபரிடம் கேள்வி கேட்க சுமார் 3000 ரூபாய் செலவிட நேர்கிறது. இந்தியாவில் ஒரு கேள்விக்கு சுமார் 1000 ரூபாய் அளவுக்கு செலவிட நேரலாம். இதர ஆய்வு செலவுகளையும் சேர்த்து பார்த்தால் – தந்தி டிவி 8250 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்த சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செல்விட்டிருக்க வேண்டும்.
இவ்வளவு பெரிய தொகையை தந்தி டிவி நிர்வாகத்திற்கு கொடுத்தது யார்? அவர்கள் எந்த நோக்கத்திற்காக தந்தி டிவியின் கருத்துக்கணிப்புக்கு பணம் கொடுத்தார்கள்? தந்தி டிவியின் கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதால் – இந்த கருத்துக்கணிப்புக்காக திமுகவிடம் பணம் வாங்கவில்லை என்று தந்தி டிவி வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்?
- “கருத்துக்கணிப்பில் பதில் அளித்தவர்கள் யார்?”
தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் பங்கேற்று பதில் அளித்தவர்கள் யார்? அந்த நபர்கள் அறிவியல் முறையில் தேர்வு செய்யப்பட்டார்களா?
அதாவது – ஒரு மாவட்டத்தில் 250 பேரிடம் கருத்துக்கேட்டதாக தந்தி டிவி கூறுகிறது. இது உண்மை என்றால், நகரம், கிராமம், ஒன்றியங்கள், வயது, வருமானம், வேலை, கல்வி, சாதி, மதம், மொழி ஆகிய அடிப்படைகளில் அந்த மாவட்டத்தை உண்மையாகவே பிரதிபளிக்கும் வகையில் – அனைத்து தரப்புகளில் இருந்தும் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்களா?
இவ்வாறு அறிவியல் பூர்வமாக உண்மையாகவே தேர்வு செய்யப்பட்டார்கள் என்றால் – மாவட்டவாரியாக அந்த புள்ளிவிவரங்களை தந்தி டிவி வெளியிடுமா?
- “கருத்துக்கணிப்பின் கேள்வித்தாள் எது?”
தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் பயன்படுத்தப்பட்ட கேள்வித்தாள் எது? எந்த பிரிவினர் எப்படி பதில் அளித்தார்கள்? எல்லா தரப்பின் பதில்களையும் முறையாக தொகுத்துள்ளார்களா? அல்லது சில பிரிவினரின் பதில்களை மட்டும் வெளியிட்டார்களா?
இது குறித்த உண்மையை அறிய, கேள்விகளின் பட்டியலையும். அந்த கேள்விகளுக்கு நகரம், கிராமம், ஒன்றியங்கள், வயது, வருமானம், வேலை, கல்வி, சாதி, மதம், மொழி ஆகிய அடிப்படைகளில் மக்கள் அளித்த பதில்களை – ஒவ்வொரு பிரிவு வாரியாக முழுமையாக தந்தி டிவி வெளியிட வேண்டும்.
- “கருத்து இல்லை என்றவர்கள் எங்கே?”
தந்தி டிவி கருத்துக்கணிப்பின் முடிவுகளை கூட்டினால் 100% வருகிறது. இந்த பட்டியலில் “கருத்து இல்லை” என்கிற பிரிவு இல்லை. 8250பேரும் அனைத்து கேள்விகளுக்கும் 100% பதில் அளித்தார்கள் என்பதும், யாருமே எந்தவொரு கேள்விக்கும் “கருத்து இல்லை” என்று கூறிவில்லை என்பதும் அறிவியலுக்கு பொருந்தாத பதில் ஆகும்.
எனவே, தந்தி டிவியின் கருத்துக்கணிப்பில் பங்கேற்க முழுமையாக மறுத்தவர்கள் மற்றும் கருத்து இல்லை என்று சொன்னவர்களின் விகிதாச்சாரத்தை தந்தி டிவி வெளியிட வேண்டும். இவர்களின் விழுக்காட்டை நீக்கிவிட்டு கருத்துக்கணிப்பு முடிவுகளை திருத்த வேண்டும்.
- “திமுகவின் பொய் பிரச்சாரத்தில் தந்தி டிவி ஒரு அங்கமா?”
திமுக குறித்து சாதகமான மனநிலையை உருவாக்க ஒரு விளம்பர/பிரச்சார திட்டத்தை மு.க. ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது. அதற்காக, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் – தமிழக மக்கள் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது போலவும், அந்த ஆதரவு பெருகிக்கொண்டே செல்வது போலவும் போலியான கட்டுக்கதைகளை உருவாக்கி பரப்பி வருகின்றனர் என்று பரவலாக நம்பப்படுகிறது.
திமுகவின் பொய் பிரச்சாரத் திட்டத்தில் ஒரு அங்கமாகவே தந்தி தொலைக் காட்சியின் ‘மக்கள் யார் பக்கம்’ கருத்துக்கணிப்பு வெளியிடப்படுவதாகவும், அது ஒரு அப்பட்டமான ஊடக விபச்சாரம் (Presstitution) என்றும் கருதப்படுகிறது.
எனவே, கருத்துக்கணிப்புக்காக திமுகவிடம் தந்தி டிவி பெற்றது என்ன? திமுகவுக்கும் தந்தி டிவிக்கும் இடையிலான ஆதாய உடன்படிக்கை என்ன? என்பதை தந்தி டிவி வெளியிட வேண்டும். குறிப்பாக, தற்போது கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு? மேலும், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தால், மாதம் தோரும் பலநூறு கோடி ரூபாய் விளம்பரங்களை தந்தி டிவிக்கு அளிக்க திமுக ஒப்புக்கொண்டுள்ளதா?
ஒருவேளை மக்களிடையே நிலவும் மேற்கண்ட சந்தேகத்தில் உண்மை இல்லை என்றால் – இந்த கருத்துக்கணிப்புக்காக திமுகவிடம் பணம் வாங்கவில்லை என்று தந்தி டிவி வெளிப்படையாக அறிவிப்பு வெளியிடுமா?
தந்தி டிவி ஊடக நேர்மையை கடைபிடிக்கிறது என்பதை மக்களுக்கு உறுதி செய்ய வேண்டிய கடமை அந்த தொலைக்காட்சிக்கு இருக்கிறது.
எனவே, மேற்கண்ட கேள்விகளுக்கு தமது தந்தி தொலைக்காட்சி மூலமாகவே விரிவான பதில் அளித்து தந்தி டிவி செய்வது “ஊடக விபச்சாரம் இல்லை” (Presstitution) என்பதை உறுதி செய்ய வேண்டும்!
– அருள் ரத்தினம்





தநà¯à®¤à®¿ TV இபà¯à®ªà¯‹à®¤à¯ à®à®©à¯ டà¯à®ªà®¾à®•à¯à®•ூர௠கரà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•ணிபà¯à®ªà¯à®•à¯à®•௠இடம௠கொடà¯à®¤à¯à®¤à¯ ஊடக விபசà¯à®šà®¾à®°à®®à¯ செயà¯à®•ிறத௠?