Screenshot 2022 06 22 114305 - 2026

ஜனாதிபதி திரவுபதி முர்மு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பிப்18-ல் வருகை?!..

மதுரை
Screenshot 2022 06 22 114305 - 2026

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பிப்18-ந் தேதி வருகை தர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக போலீசார் ஆய்வு செய்தனர்.

வரும் பிப் 18ல் கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரி விழா அதி விமரிசையாக நடைபெற உள்ளது.இந்த விழாவில் ஏற்கனவே இருந்த இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி பங்கேற்றனர்.இந்த ஆண்டு சிவராத்திரி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார். ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார்.

முன்னதாக இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி தினத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார். மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் விமான நிலையம் சென்று கோவை செல்கிறார். அங்கு ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது.

ஜனாதிபதி மதுரை வருகை அதிகாரபூர்வமாக இதுவரை தெரியவில்லை என்றாலும் அவர் பயணம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மதுரை விமான நிலையத்தில் இருந்து மீனாட்சி அம்மன் கோயில் வரையும் இதர முக்கிய சாலைகளிலும் பாதுகாப்பு தீவிரபடுத்த ஆலோசனை மேற்கொள் ளப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.