images 33 1 - 2026

குஜராத்தில் 3.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு..

இந்தியா
images 33 1 - 2026

துருக்கி சிரியா வில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் அழிவை ஏற்படுத்திய நிலையில் இந்தியாவில் 6 மாநிலங்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் இன்று குஜராத்தில். சூரத் நகரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் 3.8ரிக்டர் அளவில் 5.2 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

துருக்கி- சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். துருக்கி நிலநடுக்கத்தை முன்கூட்டிய கணித்த நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் பிரான்க், இந்தியாவில் 6 மாநிலங்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 12.52 மணியளவில் சூரத் நகரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் 5.2 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள் குஜராத்தில் 3.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.