images 2023 02 15T182340.439 - 2026

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு..

தமிழகம்
images 2023 02 15T182340.439 - 2026

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். அதன்படி வரும் 28ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கலாம்.

இதுதொடர்பாக இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்னும் 7 லட்சம் பேர் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்காமல் உள்ளனர். இதனால், இன்றுடன் நிறைவடைய இருந்த அவகாசம், பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இதுவரை 2.60 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு போன்ற பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். 

மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பா் 15-ஆம் தேதி தொடங்கியது. டிசம்பா் 31-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த இணைப்புப் பணிக்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டன. மின்நுகா்வோரின் வசதிக்காக, ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகும், புதன்கிழமை (பிப். 15)-ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.தற்போது பிப்28வரை கால அளவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.