
தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடையவே விரும்புகிறேன் என்று கூறினார் மக்கள் நீதி மய்யத் தலைவரான கமல்ஹாசன். போட்டியிட்டு தோல்வியை ஏன் அடையவேண்டும், போட்டியிடும் முன், மய்யம் கொண்ட புயல் கரையைக் கடக்கும் முன்னதாக, தானாகவே விலகட்டும் என்று கருத்து கூறுகிறார்கள் வலைத்தளவாசிகள்.
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து இன்று காலை ராஜசேகரன் விலகினார். அவரைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீபிரியாவும் விலகினார். கட்சியில் உரிய மரியாதை இல்லை என்று ராஜசேகரன் கூறியிருந்தார். இன்னமும் பொறுப்பாளர்கள் பெரிதாக நியமிக்கப் பட்டு முழு வீச்சில் எதுவும் செயல்படாத நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சிலர் இப்படி விலகி வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் காணாமல் போகும் என்று அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இணையதள கருத்து பதிவுனர் ஒருவர் தனது டிவிட்டர் பதிவில் இவ்வாறு கருத்திட்டுள்ளார்…
தேர்தல் நெருங்கும் போது கமல் கட்சியிலிருந்து @ikamalhaasan அவரே விலகுவார்.
தேர்தல் நெருங்கும் போது கமல் கட்சியிலிருந்து @ikamalhaasan அவரே விலகுவார். https://t.co/ZDdxurpLI8
— புல்லேந்தி (@ChendurSaami) April 24, 2018



