சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது 63–வது பிறந்த நாள் விழாவை இன்று கொண்டாடினார். இதையொட்டி அதிகாலை 6 மணி அளவில் அவர் தனது மனைவியுடன் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தனது தந்தையும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். ஸ்டாலினை கட்டித் தழுவி முத்தமிட்டு கருணாநிதி வாழ்த்தினார். பின்னர் குடும்பத்தினருடன் சேர்ந்து, மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கேக் வெட்டினார். மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்தும், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மாலை அணிவித்தும் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். காலை 8.30 மணி அளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொண்டர்களை சந்தித்தார். இதற்காக அங்கு அலங்கார மேடை அமைக்கப்பட்டிருந்தது. மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க மைதானத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். ஸ்டாலின் வந்ததும் அவர்கள் வரிசையாக சென்று அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். சிலர் பழங்கள், சீர்வரிசை தட்டுகள், ரூபாய் நோட்டு மாலை என அணிவித்து ஸ்டாலினை வாழ்த்தினர். தனக்கு வாழ்த்து தெரிவித்த மூத்த நிர்வாகிகளை ஸ்டாலின் பக்கத்தில் அழைத்து நிறுத்தி புகைப்படம் எடுத்து கொண்டார். மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஏ.வ.வேலு, சுரேஷ்ராஜன், ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ராமச்சந்திரன், கே.என்.நேரு, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், நிர்வாகிகள் கே.கே.நகர் தனசேகரன், முத்துவேல், மாவட்ட பிரதிநிதி கொடுங்கையூர் அன்பழகன், பல்லாவரம் நகர செயலாளர் இ.கருணாநிதி, பெருங்குடி ரவிச்சந்திரன், சேப்பாக்கம் பகுதி துணை செயலாளர் சிதம்பரம், பாண்டிபஜார் பாபாசுரேஷ், மேட்டுக்குப்பம் கமலக்கண்ணன், முத்துராமன், திருச்சி தொழில் அதிபர் ஜான்சன் குமார் உள்பட பலர் அவரை நேரில் வாழ்த்தினார்கள்.
To Read this news article in other Bharathiya Languages
மு.க.ஸ்டாலினின் 63–வது பிறந்த நாள்: கருணாநிதி முத்தம் கொடுத்து ஆசி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari