Rs 2000 notes - 2026

இன்னும் ரூ.42ஆயிரம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்காம்!

இந்தியா சற்றுமுன் வணிகம்
Rs 2000 notes - 2026

இதுவரை ரூ. 3.14 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது, இன்னமும் ரூ. 42,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது என்று, மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, வங்கிக் கிளைகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றி, சில்லறையாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் செப்டம்பர் 30-க்குள் மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவித்தது.

இந்நிலையில், ஜூலை 31 வரை ரூ. 3.14 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்தி:

மே 19ஆம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் ரூ. 3.56 லட்சம் கோடி 2,000 நோட்டுகள் இருந்த நிலையில், ரூ. 3.14 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மொத்த நோட்டுகளில் இது 88 சதவிகிதமாகும். இன்னமும் ரூ. 42,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.