செங்கோட்டையில் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி!

Published:

sengottai hindumunnani vanchistatue - 2026

செங்கோட்டையில் நகர இந்து முன்னனி சார்பில் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகி வீரவாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் வைத்து நகர இந்து முன்னணி சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வேல்சாமி தலைமை தாங்கி வீரவாஞ்சிநாதன் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் நகரப் பொதுச்செயலாளர் அருணாசலம், துணைத்தலைவர் நாணய கணேசன், செயலாளர்கள் மணிகண்டன், செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர் மூர்த்தி, லாலாகுடியிருப்பு நகரச்செயலாளர் இளையராஜா, கணக்குபிள்ளைவலசை ஒன்றியச்செயலாளர் குளத்தூர் ஐயப்பன், ஒன்றியத் தலைவர் மாசானம், கீழப்பாவூர் ஒன்றியச் செயலாளர் கண்ணன், வார்டுத் தலைவர்கள் இசக்கிமுத்து, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related articles

Recent articles

spot_img