thiruparankundram murugan temple - 2026

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை
thiruparankundram murugan temple - 2026

மதுரை: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நான்கரை மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத (தனுர்) பூஜைக்காக அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் பகல் 11.30 மணியளவில் நடை அடைக்கப்பட்டு. மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் இரவு பள்ளியறை பூஜை முடிந்தபின் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் அதிகாலையில் எழுந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். பெண்கள், ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் தரிசனம் செய்தனர்.

இதே போல், திருப்பரங்குன்றம் வேயிலுக்குகந்த அம்மன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தனூர் மாத பூஜையை யொட்டி, பக்தர்களுக்கு காலையில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.