குரங்கணி தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: ஆட்சியர் அறிவிப்பு

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

IMG 20180312 WA0007 e1520825946451 - 2026

தேனி:

தேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி, 9 பேர் உயிரிழந்ததாக தேனி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

ஈரோட்டை சேர்ந்த விஜயா, விவேவ், தமிழ்ச்செல்வி ஆகியோர் உயிரிழந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், தீயை பார்த்து பயந்து ஓடியவர்கள் பள்ளத்திற்குள் விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்கள் விவரம்:

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னையை சேர்ந்த புனிதா, அருண், பிரேமலதா, சுபா, விபின், அகிலா ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது என்று தேனி ஆட்சியர் பல்லவி தெரிவித்தார்.

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக, வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் கூறியுள்ளார். தீவிபத்தில் சென்னையை சேர்ந்த 6 பேர், ஈரோட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும்,

இதுவரை மீட்கப்பட்ட 27 பேரில், 10 பேர் நலமாக உள்ளனர் என்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் கூறியுள்ளார். மேலும் காயமடைந்த 17 பேரில், 5 பேர் தேனியிலும், 8 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து அறிய 9445000586, 9994793321 என்ற தீவிபத்து தகவல் மைய என்னை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.