
தமிழ் மக்கள் மீது மாற்றுமொழி திணிக்கப்படுகிறது என காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
தில்லியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் மாநாட்டில் பேசிவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பா.ஜனதாவை பல்வேறு விவகாரங்களில் விளாசி வருகிறார்.
பாகிஸ்தானுக்கு செல்லாமல் இந்தியாவிற்காக போராடிய இஸ்லாமியர்களை இந்தியர்கள் கிடையாது என அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் தமிழர்களை அழகிய தமிழ் மொழியில் இருந்து மாறுமாறு வற்புறுத்துகிறார்கள்.
வடகிழக்கு மாநில மக்களிடம் நீங்கள் சாப்பிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்று கூறுகிறார்கள், பெண்கள் ஒழுங்காக உடையணிய வேண்டும் என்கிறார்கள் என்று பேசினார்.
தேசத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் கட்சியின் பங்கு உள்ளது எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
ஆனால் பாவம் ராகுல் வரலாறு புக் படித்திருக்க வில்லை என்று கேலி செய்கின்றனர் சமூக தளங்களில்.



