அனுமதி இல்லாமல் மலை ஏற்றப்பயிற்சிக்கு சென்றதால், இந்த விபத்து நேர்ந்துள்ளது என்று கூறியுள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
தேனி மாவட்ட குரங்கணி மலைப்பகுதியில் மலை ஏற்றப்பயிற்சிக்கு சென்ற பெண்கள் உள்பட 9 பேர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், அனுமதியின்றி டிரெக்கிங் மேற்கொண்டதால் விபத்து நேர்ந்துள்ளது என்றும்,
முன் அனுமதி பெற்றிருந்தால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னையில் இருந்து பெண்களை குரங்கணிக்கு டிரெக்கிங் அழைத்துச் சென்ற தனியார் நிறுவனம் இரவோடு இரவாக மூடப் பட்டது.