காட்சிக்கு அவசியம்னா… நிர்வாணமா நடிக்கவும் நான் தயார்: முன்னணி தமிழ் நடிகை !

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்

Andrea Jeremiah Hot Stills 4 e1521031312339 - 2026

காட்சிக்கு அவசியம் ஏற்பட்டால், நிர்வாணமாக நடிக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் முன்னணி நடிகையான ஆண்டிரியா.

வித்தியாசமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று புகழின் உச்சத்தில் இருக்கும் போதே, நடிகைகள் பலர் பேட்டி கொடுப்பது உண்டு. சிலர் அதையே தங்கள் லட்சியமாகவும் சொல்லி விடுவார்கள். இப்போது அந்த லட்சியத்தை வெளிப்படுத்தும் வகையில் நடிகை ஆண்ட்ரியா ஒரு வித்தியாசமான தகவலைச் சொல்லியுள்ளார்.

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் விருப்பம் கொண்ட ஆண்ட்ரியா, கடந்த வருடம் ராம் இயக்கத்தில், தரமணி படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப் பெற்றது. இந்நிலையில் அண்மையில் மகளிர் தினம் தொடர்பாக சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகை ஆண்டரியா.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆண்ட்ரியா, சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆணாதிக்கம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஒரு நடிகையின் திறமை அவர் எந்த ஹீரோவுடன் நடிக்கிறார் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. தரமணி படத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் அதன் பிறகு ஒரு வாய்ப்பு கூட எனக்குக் கிடைக்கவில்லை. கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் மட்டும் மகிழ்ச்சி அடைந்து விடுவேன் என எதிர்பார்க்காதீர்கள். ஒருபோதும் எனக்கு அது மகிழ்ச்சியைக் கொடுக்காது. நான் திரையில் நிர்வாணமாகக் கூட நடிக்கவும் தயார். ஆனால் கதைக்கு அந்தக் காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும்.” என்று கூறினார்.

இதன் மூலம் அவர் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஒரு செய்தியைச் சொல்லியுள்ளார். கதாசிரியர்கள் கவனத்துடன் கதைக் களத்தைத் தேர்வு செய்யலாம்தான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.