
குக்கர் சின்னத்தை டிடிவி தினகரனுக்கு வரும் தேர்தல்களில் வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.. இந்நிலையில், இது தொடர்பாக மேல் முறையீடு செய்துள்ளது எடப்பாடி தரப்பு.
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தையும் கட்சிப் பெயரையும் உயர் நீதிமன்றம் ஒதுக்கியது, தேர்தல் ஆணைய சட்ட விதிகளுக்கு எதிரானது என்று முதலமைச்சர் எடப்பாடி தரப்பில் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.
நாளை மார்ச் 15 வியாழன் அன்று தனது புதிய கட்சி அறிவிப்பு, சின்னம், கொடி அறிமுகம் என்று களத்தில் இறங்கியுள்ளார் டிடிவி தினகரன். இந்த நிலையில் மேல்முறையீடு செய்துள்ளது எடப்பாடி தரப்பு.



