vandematharam backim chandrar - 2026

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் ‘வந்தே மாதரம்’ கட்டாயம்!

இந்தியா Featured அரசியல் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
vandematharam backim chandrar - 2026

தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் மற்றும் பள்ளிகளிலும், தேசிய கீதமான ‘ஜன கண மன’ க்கு முன்பாக இசைக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. பாடல் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விருது விழாக்கள் உள்ளிட்ட குடிமக்கள் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ கட்டாயமாக இடம்பெறும்.

சினிமா அரங்குகள் உள்ளிட்ட பொது அரங்குகளிலும் ‘வந்தே மாதரம்’ இசைக்கப்படலாம்; ஆனால் அங்கு எழுந்து நிற்பது கட்டாயமில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1937ஆம் ஆண்டு நீக்கப்பட்ட நான்கு சரணங்களும் உட்பட, பாடலின் மொத்த ஆறு சரணங்களும் இனிமேல் இசைக்கப்பட வேண்டும்.

தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ், பாடலை அவமதிப்போருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, ‘வந்தே மாதரம்’ தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடந்த ஆண்டு எழுந்த அரசியல் சர்ச்சையின் பின்னணியில் வெளியாகியுள்ளது.

வந்தே மாதர கீதம் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு தற்போது கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தேசிய எழுச்சி மற்றும் சுதந்திரத்தின் அடையாளமாகத் திகழும் வந்தேமாதர கீதத்துக்கு மரியாதை செய்யும் வகையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. நாட்டின் சுதந்திரப் போருக்கு வித்திட்ட கீதத்தை நாடு சுதந்திரம் அடைந்தபோது இருட்டடிப்பு செய்து, இதுவும் ஒரு தேசிய கீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டதற்கு பிராயச்சித்தம் சேர்க்கும் வகையில் தற்போது நாடு இந்த தேசியப் பாடலுக்கு மரியாதை செலுத்துவதாகக் கருதலாம்

பக்கிம் சந்திர சட்டோபாத்யாய எழுதிய வந்தேமாதர கீதத்தின் முழு வடிவம்”

பல்லவி
வந்தே மாதரம்! வந்தேமாதரம் !
சுஜலாம், சுபலாம், மலயஜ சீதலாம்,
சஸ்ய சியாமளாம், மாதரம்!
வந்தே மாதரம்! (1)

சுப்ர ஜ்யோத்ஸ்னா புலகித யாமினிம்,
புல்ல குசுமித த்ருமதல சோபினிம்,
சுஹாசினிம், சுமதுர பாஷினிம்,
சுகதாம், வரதாம், மாதரம்!
வந்தே மாதரம்! (2)

கோடி கோடிகண்ட-கல-கல-நிநாதகராலே
கோடி கோடி புஜைர் திருத கர கரவாலே ,
அபலா கேன மா ஏத பலே!
பஹுபல தாரிணீம்
நமாமி தாரிணீம்
ரிபு தலவாரிணீம்
மாதரம் வந்தே மாதரம். (3)

துமி வித்யா துமி தர்ம
துமி ஹ்ருதி துமி மர்ம
த்வம்ஹி ப்ராணா ஷரீரே
பஹுதே துமி மா சக்தி,
ஹ்ருதயே துமி மா பக்தி,
தோமரயி பிரதிமா கடி மந்திரே- மந்திரே
வந்தேமாதரம் (4)

த்வம் ஹி துர்கா தசப்ரஹரணதாரிணீ
கமலா கமல-தளவிஹாரிணீ
வாணி வித்யாதாயினீ –
நமாமி த்வாம் நமாமி கமலாம் அமலாம் அதுலாம்
ஸுஜலாம் ஸுபலாம் மாதரம்
வந்தே மாதரம் (5)

ஷ்யாமலாம் சரளாம் சுஸ்மிதாம் பூஷிதாம்
தரணீம் பரணீம் மாதரம் – வந்தேமாதரம் (6)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.