sabarimala at night - 2026

சபரிமலையில் பாரம்பரிய வெடி வழிபாடு நிறுத்தம்: தேவஸ்தானம் அதிரடி முடிவு!

இந்தியா ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sabarimala at night - 2026


சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாரம்பரிய வெடி வழிபாடு நிறுத்தம்: தேவஸ்தானம் அதிரடி முடிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாரம்பரியமாக பக்தர்களால் நடத்தப்பட்டு வந்த வெடி வழிபாடு தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானம் இந்த ஆண்டுக்கான வழிபாடு ஏலத்தில் வெடி வழிபாட்டை சேர்க்காமல் நீக்கியுள்ளது.

சபரிமலை அமைந்துள்ள பகுதி பெரியார் புலிகள் காப்பகத்தின் கீழ் வருகிறது. அங்கு தொடர்ச்சியாக ஏற்படும் கடுமையான வெடிச்சத்தமும் அதிர்வுகளும் அப்பகுதியில் வாழும் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாகவும் இடையூறாகவும் இருப்பதாக கூறி வனத்துறை தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

மேலும், சன்னிதானம் மற்றும் மாளிகைப்புறத்தம்மன் கோயில் பகுதிகளில் அதிக அளவில் வெடிமருந்துகளை சேமித்து வைப்பதும் கையாளுவதும் பாதுகாப்பு குறைபாடுகளையும் விபத்து அபாயங்களையும் ஏற்படுத்தும் என காவல்துறையும் அரசின் பல்வேறு துறைகளும் எச்சரித்திருந்தன.

வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கேரள அரசும் தேவஸ்தானமும் இணைந்து இந்த வெடி வழிபாட்டை தற்போது நிறுத்தியுள்ளன.

பல லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த வெடி வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையில், பல்வேறு பாதுகாப்பு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.