srivilliputhur andal serthi sevai - 2026

தீபாவளி சிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சேர்த்தி சேவை!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
srivilliputhur andal serthi sevai - 2026

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு இன்று (நவ8) நடந்த சேர்த்தி சேவை சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனை முன்னிட்டு இன்று மாலை 5:00 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆழ்வார்கள் எழுந்தருளினர். அவர்களுக்கு புத்தாடை சாற்றி சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் சமேத ரெங்கமன்னார் கோயிலில், தீபாவளி பண்டிகையன்று அனைத்து முக்கிய தெய்வங்களும் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் “சேர்த்தி சேவை” (சிறப்பு கூட்டு வழிபாடு) மிகவும் புகழ்பெற்ற ஒரு வழிபாடாகும்.

இந்த விசேஷமான சேர்த்தி சேவை வருடத்தில் வெறும் மூன்று முறை மட்டுமே (தீபாவளி, கௌசிக ஏகாதசி, மற்றும் தெலுங்கு வருடப்பிறப்பு ஆகிய நாட்களில்) இந்த அரிய கூட்டுத் தரிசனம் பக்தர்களுக்குக் கிடைக்கும்.

ALSO READ:  பறிக்கப்படுவது ஒருவரின் பணியிடத்தையா? கண்ணியத்தையா?

தீபாவளிப் பண்டிகை அன்று மாலை வேளையில், கோயிலின் வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில்: ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், ,ஸ்ரீ ரெங்கமன்னார் ,பெரிய பெருமாள் (வடபத்ரசாயி சன்னதியிலிருந்து எழுந்தருளுபவர்) ,ஸ்ரீதேவி பூதேவி,கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்கள் அனைவரும் ஒரே மண்டபத்தில் ஒன்றாக எழுந்தருளுகின்றனர். இந்த அனைத்து தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் மற்றும் அமுது செய்தல் போன்ற உன்னத வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இன்று நடந்த இந்த விழாவில் ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னார் பெரிய பெருமாள் கருடாழ்வார் ஸ்ரீதேவி பூமாதேவிக்கு மற்றும் ஆழ்வார்கள் சிறப்பு பட்டு வஸ்திரங்கள் முகத்தில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.

Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam