madurai tanishq jewel robbery case nishant appeared before majistrate - 2026

மதுரை நகைக்கடை கொள்ளை; நிஷாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்!

மதுரை கிரைம் நியூஸ் சற்றுமுன்
madurai tanishq jewel robbery case nishant appeared before majistrate - 2026

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையன் நிஷாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்: டிசம்பர் 1 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு.

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 11.4 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்
கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான நிஷாந்தை டிசம்பர் 1-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை மாவட்ட ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்தில் தப்பிச் செல்ல முயன்ற நிஷாந்தை, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை போலீசார் திங்கள்கிழமை நள்ளிரவு மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். பின்னர், மதுரையிலிருந்து சென்ற தனிப்படை போலீசார் அவரைத் தங்களது காவலில் எடுத்து மதுரைக்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து, மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் வைத்து நிஷாந்திடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் மீதமிருந்தவற்றை விளாச்சேரி மலைப்பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக அவர் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், சுமார் 6.4 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளைப் பத்திரமாக மீட்டனர்.

ஏற்கெனவே, நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் காதலி மீனாட்சி நாச்சியார் ஆகியோரிடமிருந்து சுமார் 5 கிலோ நகைகள் மீட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எஞ்சிய நகைகளும் மீட்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட 11.4 கிலோ நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.

ALSO READ:  மதுரை தனிஷ்க் நகைக் கடையில், தனி ஒருவனாக கொள்ளை அடித்தது எப்படி?

இதனைத் தொடர்ந்து, நிஷாந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர். முதற்கட்டமாக, எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட நிஷாந்திற்கு, மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னர், மதுரை மாவட்ட ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி பிரியா முன்பு நிஷாந்த் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி,
குற்றவாளி நிஷாந்தை வரும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

கடந்த ஐந்து நாட்களாக மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த இந்த மெகா கொள்ளை வழக்கில், மதுரை மாநகர காவல்துறையினரின் துரிதமான மற்றும் சிறப்பான செயல்பாட்டால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நகைகள் அனைத்தும் முழுமையாக மீட்கப்பட்டு தற்போது இந்த வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

காவல் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்குமாம்; தமிழகத்துக்கு பேராபத்து: எச்சரிக்கும் இந்து முன்னணி!

Posts by ரவிச்சந்திரன், மதுரை: