மதுரையில் குஷ்பு கலந்து கொண்ட ‘நம்ம ஊர் பொங்கல்’ விழா!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai-namma-ooru-pongal-kushpoo
madurai-namma-ooru-pongal-kushpoo

மதுரையில் பா.ஜ.க., சார்பில் மகளிர் அணி நடத்திய நம்ம ஊர் பொங்கல் விழா நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் கே.கே.ஸ்ரீநிவாசன், தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் இராம. ஸ்ரீநிவாசன், மாநில செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர் ஆகியோர் தலந்து கொண்டு நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியை நடத்தினர்.

பாஜக வர்த்தக பிரிவு மாநில செயலாளர் மகாதேவன், மாவட்ட துணை தலைவர் ஹரிஹரன், பொருளாளர் பாலமுருகன் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

madurai-namma-ooru-pongal-kushpoo1
madurai-namma-ooru-pongal-kushpoo1

முன்னதாக, மதுரை அருகே தெப்பக்குளத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற நம்ம ஊர் பொங்கல் விழாவை தொடங்கி வைத்து பேசினார், நடிகையும் பாஜக., செய்தி தொடர்பாளருமான குஷ்பூ சுந்தர். பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம. சீனிவாசன், மாவட்டத் தலைவர் கே.கே.சீனிவாசன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேனா என்று தெரியாது. எங்கே போட்டியிடப் போகிறேன் என்பது தெரியாது. நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக மாநில தலைவரும் டெல்லியில் இருக்கக் கூடிய தேசிய தலைவரும் முடிவு செய்ய வேண்டும்… என்றார்.

ஒருவேளை தேர்தலில் போட்டியிட்டால், நீங்கள் ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடத் தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டபோது, எதிர்க் கட்சி தலைவராக இருந்தாலும், திமுக தலைவராக இருந்தாலும் யார் நின்றாலும் என்னை போட்டியிட சொன்னால் நான் போட்டியிடத் தயார்.” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.