
பாரதிய ஜனதா கட்சியின் நம்ம ஊரு பொங்கல்… நடிகை கௌதமி வீட்டில், பொங்கல் படையலிட்டு உற்சாகம்!
தமிழகம் முழவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நடிகை கௌதமி வீட்டில் பொங்கல் விழா நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், பாரதிய ஜனதா கட்சியின், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நடிகை கௌதமி, இன்று தான் குடியிருக்கும் வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடினார். நிகழ்ச்சியில் பாஜக கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கௌதமி, இந்த ஆண்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நம்ம ஊரு பொங்கல் என, பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
விவாதம் என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். விவாதங்கள் மக்கள் நலன் சார்ந்ததாக, ஜனநாயகம் சார்ந்ததாக இருக்க வேண்டும். தனிமனித தாக்குதல் இருக்கக் கூடாது. பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக அநாகரீக முறையில் பேசக்கூடாது.

திமுக கட்சியை சேர்ந்த உதயநிதி ஸ்டாலின், பெண்களை பற்றி இழிவாகப் பேசுவது நாகரீகமற்ற செயல், அவர் உள்ளத்தில் உள்ளது தான் வார்த்தையாக வருகிறது, இதிலிருந்து அவரின் தரம் என்ன, அவரின் குணம் என்ன என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெண்களை இழிவாக பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன் என்று நடிகை கௌதமி பேசினார்.