மே 7, 2021, 4:15 காலை வெள்ளிக்கிழமை
More

  பிப்.28ல் ஈரோடில் அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாடு!

  சமூக மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி ஈரோட்டில் அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாடு

  arunthadiyar-meeting
  arunthadiyar-meeting

  .*அருந்ததியர் சமூக மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி ஈரோட்டில் அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாடு:

  மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் அருந்ததியர் கூட்டமைப்பு மற்றும் அருந்ததிய இயக்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவருமான கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

  இதில், மதுரை விருதுநகர் திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து அருந்தியர் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  இக்கூட்டத்தில் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாடு குறித்து விவாதிக்கப் பட்டது.

  அருந்ததியர் சமூக மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டியலின மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட அருந்ததியர் சமூகத்திற்கு கல்வி வேலை வாய்ப்பில் வழங்கப்பட்டுள்ள 3% இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்,

  அருந்ததியர் சமூகத்திற்கு என்று தனியாக அருந்ததியர் நல வாரியம் அமைக்க வேண்டும்,

  2021 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளிலும் மேற்கு மாவட்டங்களில் உள்ள தனித் தொகுதிகளில் வேட்பாளர்கள் அருந்ததிய சமூகத்தை சார்ந்தவர் நிறுத்த வேண்டும்,

  சுதந்திரப் போராட்ட வீரர் வீரமங்கை குயிலிக்கு சிவகங்கையில் தனியாக மணிமண்டபம் அமைக்க வேண்டும்,

  அருந்ததியர் சமுதாயத்தினர் உட்பிரிவுகளில் சக்கிலியர் மாதாரி மாதிகா தோட்டி மற்றும் இதர பிரிவுகளை ஒருங்கிணைத்து அருந்ததியர் என்ற அரசாணையை மத்திய அரசு வெளியிட வேண்டும்,

  சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் சுட்டுக் கொல்லப் பட்ட இடமான அரச்சலூர் கிராமம் நல்ல மங்கபாலயத்தில் நினைவுச் சின்னமும் மணிமண்டபம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசு அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,234FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,156FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »