sabarimala aiyappa concluding pooja - 2026

சபரிமலை பக்தர்களுக்கு 24 மணி நேர தகவல் மையம்! தொடர்பு எண்கள் வெளியீடு!

சற்றுமுன் இந்தியா சுற்றுலா சென்னை பொது தகவல்கள்
sabarimala aiyappa concluding pooja - 2026

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு 24 மணி நேர தகவல் மையம் – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு! தொடர்பு எண்களும் வெளியீடு!

சபரிமலை செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா திருக்கோவிலில் மண்டல பூஜை நவம்பர் 17-ஆம் தேதி முதல் டிசம்பர் 27-ஆம் தேதி வரையும், மகரவிளக்கு பூஜை டிசம்பர் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை வழங்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை ஆணையர் அலுவலகம், தமிழக – கேரள எல்லையான களியக்காவிளை மற்றும் சபரிமலை ஆகிய மூன்று இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்கள் ஜனவரி 20-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் செயல்படும்.

ALSO READ:  சித்திரை ஆட்டத் திருநாள் பூஜை; சபரிமலை பக்தர்களுக்கு ஒரு ‘நல்ல’ செய்தி!

தொடர்பு எண்கள்:

சென்னை தகவல் மையத்தை 1800 425 1757 என்ற கட்டணமில்லா எண்ணிலும், களியக்காவிளை தகவல் மையத்தை 9894433179, 8760668834, 9486270443 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

சபரிமலை தகவல் மையத்தில் பணிபுரியும் அலுவலர்களின் தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

நவம்பர் 17 முதல் டிசம்பர் 2 வரை பிரேம்குமார் – 63858 06900, வால்கிருஷ்ணன் – 70949 06442 ஆகியோரும்,

டிசம்பர் 3 முதல் 17 வரை சிவக்குமார் – 94439 94342, சதீஷ்குமார் – 73588 39969, சேகர்ராஜா – 83440 21828 ஆகியோரும்,

டிசம்பர் 18 முதல் ஜனவரி 2 வரை செந்தில்குமார் – 70105 49951, சதீஷ் – 99405 76898 ஆகியோரும்,

ஜனவரி 3 முதல் 20 வரை சந்திரகுமார் – 85310 70571, வெங்கடேஷ் – 98433 70229, ரமேஷ் – 84384 44770, சுதாகர் – 99425 05466 ஆகியோரும் பணியில் இருப்பார்கள்.

எனவே, சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ளும் தமிழக ஐயப்ப பக்தர்கள் இந்த தகவல் மையங்களை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களையும் உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்

ALSO READ:  திருக்கோயில்கள்-81 நூல் வெளியீடு!

Posts by Dhinasari Reporter: